Published : 06 Apr 2014 09:31 AM
Last Updated : 06 Apr 2014 09:31 AM

பாஜக கூட்டணிக்கு 259; காங்கிரஸ் அணிக்கு 123- என்டிடிவி கருத்துக் கணிப்பில் தகவல்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 259 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 123 இடங்களும் கிடைக்கும் என்று என்.டி.டி.வி. மற்றும் ஹன்சா ரிசர்ச் குரூப் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

பாஜகவுக்கு 214 இடங்கள்

மக்களவையின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543. இதில் பாஜக கூட்டணிக்கு 259 இடங்கள் கிடைக்கும். பாஜக மட்டும் 214 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி 123 இடங்களைக் கைப்பற்றும். இதில் காங்கிரஸுக்கு மட்டும் 104 இடங்கள் கிடைக்கும். இதர கட்சிகள் 161 இடங்களில் வெற்றி பெறும். மாநில வாரியாக பல்வேறு கட்சிகள் பெறும் இடங்கள் விவரம் வருமாறு:

அதிமுகவுக்கு 25 இடங்கள்

தமிழகத்தின் மொத்த தொகுதி கள் - 39. இதில் அதிமுகவுக்கு 25 இடங்களும், திமுகவுக்கு 11 இடங்களும் கிடைக்கும். பாஜக கூட்டணி 3 இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸுக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றிவாய்ப்பு இல்லை.

பிஹாரில் மொத்த இடங்கள் 40. இதில் பாஜக – 21, காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் 11 இடங்களைக் கைப்பற்றும். ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும். இதர கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெறும்.

டெல்லியின் மொத்த தொகுதிகள் - 7. பாஜக – 4, காங்கிரஸ்- 1, ஆம் ஆத்மி- 1, இதர கட்சி ஓர் இடத்திலும் வெற்றி பெறும்.

குஜராத்தில் பாஜகவுக்கு 22

குஜராத்தின் மொத்த தொகுதிகள் – 26. இதில் பாஜக- 22, காங்கிரஸ்- 4 இடங்களைக் கைப்பற்றும். கர்நாடகத்தின் மொத்த தொகுதிகள் - 28. பாஜக- 16 காங்கிரஸ்- 10. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 2 இடங்கள் கிடைக்கும்.

கேரளாவில் இடதுசாரிகள்- 11

கேரளாவில் மொத்த தொகுதி கள் - 20. காங்கிரஸ் கூட்டணி - 9, இடதுசாரி கூட்டணி- 11 இடங்களையும் கைப்பற்றும். இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு ஓரிடம்கூட கிடைக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் மொத்த தொகுதிகள் 29. பாஜக- 25, காங்கிரஸ் – 4 இடங்களில் வெற்றிபெறும். மகாராஷ்டிரம் மொத்த தொகுதிகள் 48. பாஜக- 36. காங்கிரஸ்- 10. இதர கட்சிகள்- 2 இடங்களைக் கைப்பற்றும். ஒடிசா மொத்த தொகுதிகள் - 21. ஆளும் பிஜு ஜனதா தளம்- 18, காங்கிரஸ் - 3 இடங்களைப் பெறும். பாஜகவுக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றிவாய்ப்பு இல்லை.

ராஜஸ்தான் மொத்த தொகுதிகள் - 25. பாஜக- 21, காங்கிரஸ் 3. இதர கட்சிகள் -1 இடங்களைக் கைப்பற்றும். சீமாந்திரா (ஆந்திரம்) மொத்த தொகுதிகள் - 25. தெலுங்கு தேசம்- 14 ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்- 10, காங்கிரஸ்-1 இடங்களைப் பிடிக்கும். தெலங்கானா (ஆந்திரம்) மொத்த தொகுதிகள் - 17. இதில் தெலங்கானா ராஷ்டிர சமிதி- 7, காங்கிரஸ்- 7, தெலுங்கு தேசம் - 2 இடங்களில் வெற்றி பெறும்.

உத்தரப் பிரதேசம் பாஜக- 53

உத்தரப் பிரதேசத்தின் மொத்த தொகுதிகள் 80. இதில் பாஜக- 53, காங்கிரஸ் -7 ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு 13, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 7 இடங்கள் கிடைக்கும். மேற்கு வங்கத்தின் மொத்த தொகுதிகள் 42. காங்கிரஸ்- 5, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு 28 இடங்களும் இடது சாரிகளுக்கு 9 இடங்களும் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x