Published : 01 Jan 2019 07:56 PM
Last Updated : 01 Jan 2019 07:56 PM

முத்தலாக் ஆண்- பெண் சமத்துவம் தொடர்பானது; சபரிமலை பாரம்பரியம் சார்ந்தது: பிரதமர் மோடி விளக்கம்

முத்தலாக் விவகாரம் ஆண், பெண் சமத்துவம் தொடர்பானது என்றும் அதேசமயம் சபரிமலை விவகாரம் அந்த கோயிலின் பாரம்பரியம் சார்ந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் முத்தலாக் சட்டம் தொடர்பாக கூறிகையில் ‘‘முத்தலாக் விவகாரத்தை பொறுத்தவரை கடந்த தேர்தலின் எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக குறிபிட்டுள்ளோம். அது ஆண் - பெண் சமத்துவம் தொடர்பானது. முஸ்லிம் நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தான் இதில் மத விவகாரம் இல்லை என கூறுகிறோம். இந்த விவகாரத்தில் சட்டரீதியான தீர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்’’ என்றார்.

சபரிமலை தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் ‘‘நமது நாட்டில் எத்தனையோ கோயில்களில் வேறுபட்ட மரபுகள் பின்பற்றப்படுகின்றன. ஆண்கள் செல்ல முடியாத கோயில்களும் உள்ளன அல்லது செல்லாத கோயில்களும் உள்ளன. இந்த விவகாரத்தில் மாறுபட்ட தீர்ப்பளித்த பெண் நீதிபதி இதனை தெளிவு படுத்தியுள்ளார். இது கோயில் பாரம்பரியம் சார்ந்தது என நீதிபதி விளக்கியுள்ளார். எங்கள் நிலைப்பாடு இது தான்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x