

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று மைசூருவில் உள்ள வருணா தொகுதிக்குட்பட்ட கார்கேஸ்வரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப் போது சித்தராமையாவிடம் அப் பகுதி காங்கிரஸ் நிர்வாகியான ஜமாலர் என்ற பெண், “நீங்கள் தொகுதிக்கு வருவது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைப் பதில்லை. எங்களுக்கு தெரியாமல் மைசூருவுக்கு வந்து செல்கிறீர்கள்.
இந்த தொகுதி எம்எல்ஏவான உங்கள் மகன் யதீந்திராவும் எப்போது தொகுதிக்கு வருகிறார் எனத் தெரியவில்லை” என ஒலி பெருக்கியில் குற்றம்சாட்டினார்.
இதனால் கோபமடைந்த சித்த ராமையா, பேசுவதை நிறுத்துமாறு அவரை திட்டினார். ஆனால் ஜமா லர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் ஆவேசமான சித்தராமையா அவரை திட்டிய வாறு, கையில் இருந்த ஒலி பெருக் கியை பிடித்து இழுத்தார். அப் போது ஜமாலர் அணிந்திருந்த துப் பட்டா சரிந்து விழுந்தது. இதை யடுத்து அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அப்பெண்ணை கட்டாயமாக அமர வைத்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. பாஜகவினரும், மகளிர் அமைப்பி னரும் சித்தராமையாவுக்கு கண்ட னம் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர்.