6 மிஸ்டு கால்; ரூ.1.86 கோடி அம்பேல்!- ஜவுளி அதிபரிடம் சிம் ஸ்வாப் மூலம் நூதன மோசடி

6 மிஸ்டு கால்; ரூ.1.86 கோடி அம்பேல்!- ஜவுளி அதிபரிடம் சிம் ஸ்வாப் மூலம் நூதன மோசடி
Updated on
2 min read

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.86 கோடி பணம் திருடப்பட்டுள்ளது. சிம் ஸ்வாப் எனும் மோசடி மூலம் இந்த நூதனத் திருட்டு நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஜவுளி தொழிலதிபர் கூறும்போது, "கடந்த டிசம்பர் 27, 28 தேதிகளில் இரவு 11.44 மணியிலிருந்து அதிகாலை 1.58 மணிக்கு இடைப்பட்ட வேளையில் தனது செல்போனுக்கு அடுத்தடுத்து 6 மிஸ்டு கால்கள் வந்தன. அதன் பின்னரே எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.86 கோடி திருடப்பட்டிருக்கிறது. சைபர் நிபுணர்கள் இது சிம் ஸ்வாப் மூலம் நடந்துள்ளது எனக் கூறுகின்றனர்" என்றார்.

சிம் ஸ்வாப் என்றால் என்ன?
பணமில்லாப் பரிவர்த்தனை ஊக்கப்படுத்தப்படும் காலத்தில் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. நான் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் தளங்கள் என்க்ரிப்டடாக இருக்க வேண்டும். அந்த தள முகவரி அருக்கே இருக்கும் பச்சைப்பூட்டு இதனை உறுதி செய்யும். 

HTTPS என ஆரம்பிக்கும் தளங்கள் எல்லாமே என்கிரிப்ட் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும். இவ்வகை தளங்கள் தான் பச்சை பூட்டு குறியீட்டை தரும். அப்படியிருந்தால், அங்கு நாம் கொடுக்கும் நம் வங்கிக் கணக்கு மற்றும் க்ரெடிட் கார்டு தகவல்களை அவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் , வேறு யாராலும் திருட முடியாது.

ஆனால், சில நேரங்களில் அப்படி என்க்ரிப்ட் ஆகாத தளம் வழியாக நாம் ஏதும் பணப் பரிவர்த்தனை செய்திருந்தால் நமது வங்கிக் கணக்குகள், பாஸ்வேர்ட் விவரம் ஹேக்கர்களிடம் சிக்கிவிடும். ஆனால், இதன் மூலமாக மட்டுமே பணத்தைக் கொள்ளையடிக்க முடியாது. அதற்கு நமது மொபைல் எண் அதுவும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம்.

வங்கிக் கணக்கிலிருந்து ஆதார் எண் போன்ற விவரங்களைத் திருடும் ஹேக்கர்கள் நம் மொபைல் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு சிம் கார்டு தொலைந்துவிட்டதாகத் தெரிவிப்பார்கள். அதனை ப்ளாக் செய்யவும் கூறுவார்கள். பின்னர் புதிய சிம் கிடைத்தவுடன் அதைப் பயன்படுத்தி வங்கி பணப் பரிவர்த்தனைக்கான ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) பெற்று பணப் பரிவர்த்தனை செய்வார்கள். இதுதான் சிம் ஸ்வாப் "SIM swap"

28 முறை பணப் பரிவர்த்தனை:

பாதிக்கப்பட்ட தொழிலதிபரின் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் 28 முறை பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அவரது சிம் கார்டு ப்ளாக் செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு பணப் பரிவர்த்தனை தொடர்பான எந்த எஸ்.எம்.எஸ்ஸும் வரவில்லை. அவருக்கு வந்த 6 மிஸ்டு கால்களில் இரண்டு கால்களில் லண்டனில் இருந்து வந்துள்ளன. 

பாதிகப்பட்ட நபர் செல்போன் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது கடந்த டிசம்பர் 27-ம் தேதி இரவு 11.15 மணியளவில் அவரது சிம் கார்டு ப்ளாக் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்றே ப்ளாக் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் பின்னர் டிசம்பர் 29-ம் தேதி புதிய சிம் கார்டு அளிக்கப்பட்டதாகவும் செல்போன் நிறுவனம் தெரிவித்தது.

வங்கிக்கு சென்றபோதே தெரிந்தது..

ஆனால், தனது செல்போன் சிம் கார்டு வாயிலாக தனது பணம் திருடப்பட்டது பாதிக்கப்பட்ட நபருக்கு வங்கிக்குச் சென்ற பிறகே தெரிந்திருக்கிறது. வங்கியில் பணம் எடுக்கச் சென்ற அவரது ஊழியர், எஜமானரின் கணக்கில் பணம் முழுவதும் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சோதனையின் போது 15 வெவ்வேறு கணக்குகளுக்கு 28 முறையாக மொத்த பணமும் மாற்றப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in