

காஷ்மீர் மாநில போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டம் பின்னெர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் ஒரு குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உயிரிழந்த தீவிரவாதிகளின் அடையாளம் மற்றும் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.