எம்எல்ஏக்களிடம் பாஜக விலை பேசுகிறது: கர்நாடக முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

எம்எல்ஏக்களிடம் பாஜக விலை பேசுகிறது: கர்நாடக முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
Updated on
1 min read

கர்நாடகாவில் முதல்வர் குமார சாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவ தாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் தலைமறை வாக இருக்கும் நிலையில் அக் கட்சியினர், பாஜக ‘ஆபரேஷன் தாமரை' என்ற பெயரில் எம்எல்ஏக் களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். எம்எல்ஏக்கள் கட்சி தாவுவதை தடுக்கும் வகையில், காங்கிரஸ் மேலிடம் தங்களது எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி நேற்று பெங்களூருவில் கூறுகையில், ‘‘ஆபரேஷன் தாமரை' இன்னும் முடியவில்லை. எங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் விலை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நேற்றிரவு கூட எங்கள் எம்எல்ஏ ஒருவருக்கு பாஜக விலை பேசி இருக்கிறது. ஆனால் எங்கள் எம்எல்ஏ அதை மறுத்திருக்கிறார்'' என தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவரும் முன்னாள் முதல்வரு மான எடியூரப்பா கூறும்போது, ‘‘குமாரசாமி ஆதாரமில்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நாங்கள் எந்த ஆபரேஷனிலும் ஈடுபடவில்லை. யாரிடமும் விலை பேசவில்லை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. காங்கிரஸ் - மஜத கூட்டணியில் குழப்பம் இருப்பதால், அவர்களது எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள்.

அப்படித்தான் சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் எங்கள் பக்கம் வந்தார்கள். எங்கள் எம்எல்ஏக்களு டன் சேர்ந்து தற்போது எங்களின் பலம் 104 ஆக உயர்ந்துள்ளது''என பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in