

சபரிமலை கோயில் பிரச்சினை தொடர்பாக விதிக்கப்பட்ட புதிய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி 10 நாட்களாக உண்ணாரவிரதம் மேற்கொண்ட பாஜக மகளிரணித் தலைவர் கைது இன்று கைது செய்யப்பட்டார்.
சபரிமலை ஆலயத்தில் புதிதாக சுமத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி பாஜகவின் மகளிர் அமைப்பான மகிளா மோர்ச்சாவின் தலைவர் டி.வி ரமா கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இக்கோரிக்கையோடு போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினர் மற்றும் மகிளா மோர்ச்சா தலைவர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை போலீஸார் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த டி.வி.ரமா இன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அவ்விடத்தில் தற்போது பி.கே.கிருஷ்ணதாஸ் என்பவர் உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், 50 வயது நிறைவுபெறாத பிந்து மற்றும் கனகதூர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்கள் நடந்தன. கடைகள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டன. கேரளா முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
செப்டம்பர் 28, 2010 அன்று, ஐயப்பன் சன்னதிக்குள் 10 முதல் 50 ஆண்டுகள் வரையிலான வயது முதிர்ந்த பெண்கள் அய்யப்பன் சன்னதிக்குச் செல்ல இருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாநில முதல்வர் பினராயி விஜயன் அத்தீர்ப்பை அமல்படுத்துவதில் முனைந்துள்ளார். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.