

காவல்துறை மற்றும் தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரபல குடிமக்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பி னருமான ராம் ஜெத்மலானி தலைமையிலான இந்த அமைப்பு பிரதமருக்கு எழுதி யுள்ள கடிதத்தில், “நாடாளு மன்றம், சட்டமன்றங்களுக்கு குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கப் படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, வரும் சட்ட மன்ற தேர்தல்களுக்கு முன் பாக சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிட் டுள்ளனர்.
மத்திய அரசின் முன்னாள் செயலாளர் புரேலால், சிபிஐ முன்னாள் இயக்குநர் ஜோகிந்தர் சிங், முன்னாள் டிஜிபிக்கள் பிரகாஷ் சிங், சசிகாந்த், சமூக ஆர்வலர் பி.வி.ராஜகோபால், கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தேவதியா என பல்வேறு துறை பிரபலங்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுடன் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் ஆகியோரும் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
“நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் காவல்துறையை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்தியாவுக்கு மக்கள் காவலர்களே தேவை. ஆட்சியாளர்களின் காவலர்கள் அல்ல. காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவு களை மாநில அரசுகள் முழு அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் இக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.