

முன்னாள் குஜராத் முதல்வரான சங்கர் சிங் வகேரா சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) நேற்று இணைந்தார்.
குஜராத்தில் பாஜகவில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் சங்கர் சிங் வகேலா. அம்மாநிலத்தில் 1995-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோது, முதல்வராக வகேலா தேர்வு செய்யப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வேறொருவரை முதல்வராக பாஜக தலைமை தேர்வு செய்தது. இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, பாஜகவிலிருந்து விலகிய வகேலா, காங்கிரஸின் ஆதரவுடன் அம்மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றார்.
எனினும், ஓராண்டு மட்டுமே அவர் முதல்வராக நீடிக்க முடிந்தது. இதனிடையே, காங்கிரஸில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த அவர், கடந்த 2017 -இல் அக்கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அவர் நேற்று இணைந்தார்.