Published : 10 Jan 2019 07:22 AM
Last Updated : 10 Jan 2019 07:22 AM

கின்னஸ் சாதனையில் போலவரம் அணை

ஆந்திர மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் போலவரம் அணைக்கட்டின் கட்டுமான பணியில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் , ரூ.58 ஆயிரம் கோடியில் போலவரம் அணையின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய, மாநிலஅரசுகளின் நிதிகளால் இந்த அணையின் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இதில் ஆந்திர மாநிலம் இதுவரை ரூ. 15 ஆயிரம் கோடி செலவுசெய்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதற்காக 24 மணி நேரத்தில் 32,315 கியூபிக் கான்க்ரீட் பணிகள் போடப்பட்டு அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை காலை 8 மணிக்குகான்க்ரீட் பணிகள் முடிக்கப்பட்டன. தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் பங்கேற்று இப்பணிகளை முடித்துள்ளனர். இது ஒரு கின்னஸ் சாதனையாகும். இந்த கான்க்ரீட் பணிகளில் 2 கின்னஸ் சாதனைகள் பதிவாகியதாக கின்னஸ் உலக சாதனை புத்தக பிரதிநிதி அறிவித்தார். அதன்படி, துபாயில் 21,580 கியூபிக் கான்க்ரீட் பணிகள் 36 மணி நேரத்தில் நடந்ததுதான் சாதனையாக இருந்தது. அது தற்போது போலவரம் அணைக்கட்டு பணிகளில் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, துபாயில் போடப்பட்ட கான்க்ரீட் பணிகளை வெறும் 16 மணி நேரத்தில் முறியடித்தும் தற்போது சாதனை படைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை படைத்ததற்கான சான்றிதழை பிரதிநிதிகள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வழங்கினர். இந்த சாதனையை நிகழ்த்திய நவயுகா இன்ஜினீயரிங் நிறுவனத்தை வெகுவாக பாராட்டிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, இதில் உழைத்த ஒவ்வொருவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதே உற்சாகத்தோடு நடத்தி, அடுத்த ஆண்டுக்குள் அணைக்கட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுமென முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஒரே நாளில் செய்வது பாதுகாப்பானதா?- சென்னை இன்ஜினீயர் கருத்து 

சென்னையைச் சேர்ந்த பிரபல ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர் கூறியதாவது:

போலவரம் அணை போன்ற கட்டுமானத்தின்போது, கண்காணிப்பு மிக அவசியம். சாதாரணமாக வீடு கட்டும்போது போடப்படும் கான் கிரீட் அல்ல அது. இது 'ஹை பெர்பார்மிங் கான்கிரீட்' என அழைக்கப் படும். வெப்பத்தைத் தணிக்க சாம்பல், இரும்பு எடுத்த பிறகு கிடைக்கும் கழிவுப் பொருட்கள், பிளாக் சிமெண்ட் போன்றவற்றைக் கொண்டு கான்கிரீட் போடும்போது கட்டுமானம் வலுப்பெற நாளாகும். விரிசல் ஏற்படாது. வெப்பத்தைத் தாங்கும் தன்மை அதிகமாக இருக்கும்.

மேற்கண்டவற்றை எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்பதை ஆய்வுக்கூடத்தில் முறையாக ஆய்வு செய்து, உரியமுறையில் வடிவமைத்து, உரிய அளவு கலவையுடன் கான்கிரீட் போடும்போது அது பாதுகாப்பானதாகத்தான் இருக்கும். அதுபோல பெரியளவில் கான் கிரீட்டைக் கொட்டும்போது எவ்வளவு வெப்பம் உருவாகும். அதை எப்படிக் குறைக்கலாம். அதன் விளைவுகளை எப்படிக் கட்டுப்படுத் தலாம் என்பதை முதலிலே ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்து, வடிவமைத்து, பிறகுதான் கான்கிரீட்டைக் கொட்ட வேண்டும்.

கடந்த வாரம் நான் விஜயவாடா சென்று அங்கு கட்டப்படும் புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணியைப் பார்வையிட்டேன். 52 மீட்டர் அகலம், 52 மீட்டர் நீளம், 4 மீட்டர் உயரத்தில் 1,200 கனமீட்டர் கான்கிரீட் போட்டனர். அதைப் பார்த்து உரிய ஆலோசனைகளைச் சொன்னேன். எனவே, உயரமான கட்டிடத்திற்கான கான்கிரீட் போடு வதைவிட இது சுலமானதுதான். இருப்பினும் ஒரேநேரத்தில் ஏராளமான இன்ஜினீயர் கள், ஊழியர்கள், உபகரணங்கள், வாகனங்களை ஒருங் கிணைத்து செய்வதுதான் பெரிய வேலை. பெரியளவில் அணைக் கட்டு கட்டும்போது அதற்கான வழிமுறைகளுடன்தான் கட்டுவார் கள். அந்த கான்கிரீட் பாதுகாப்பானதாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x