Published : 07 Jan 2019 07:38 am

Updated : 07 Jan 2019 07:38 am

 

Published : 07 Jan 2019 07:38 AM
Last Updated : 07 Jan 2019 07:38 AM

தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 257 இடங்கள் கிடைக்கும்: இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தகவல்

257

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) 257 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 146 இடங்களும் கிடைக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப் பேரைவைத் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக 3 முக்கியமான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் சார்பில் கடந்த டிசம்பர் 15 முதல் 25-ம் தேதி வரையில் நாடு முழுவதும் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் விவரம் வருமாறு:

இப்போது தேர்தல் நடந்தால் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 257 இடங்கள் மட்டுமே கிடைக் கும். இது பெரும்பான்மை பலத் துக்கு தேவையான 272 இடங்களை விட 15 இடங்கள் குறைவு ஆகும். இதுபோல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு (யுபிஏ) 146 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கு 140 இடங்கள் கிடைக்கும். இதில் சில கட்சிகளின் ஆதரவுடன்தான் மத்தியில் புதிய ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.

என்டிஏ கூட்டணியில் பாஜக (223), சிவசேனா (8), ஐக்கிய ஜனதா தளம் (11), அகாலி தளம் (5), பாஸ்வானின் எல்ஜேபி (3), மிசோ தேசிய முன்னணி (1), அப்னா தளம் (1), சிக்கிம் ஜனநாயக முன்னணி (1), மேகாலயாவின் என்பிபி (1), புதுச்சேரியின் என்ஆர் காங்கிரஸ் (1), பாமக (1), நாகாலாந்தின் என்டிபிபி (1) ஆகிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

யுபிஏ கூட்டணியில், காங்கிரஸ் (85), திமுக (21), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (10), தேசியவாத காங்கிரஸ் (9), மதச்சார்பற்ற ஜனதா தளம் (4), தெலுங்கு தேசம் (4), ராஷ்ட்ரிய லோக் தளம் (2), தேசிய மாநாடு (2), ஆர்எஸ்பி (1), ஜேஎம்எம் (4), ஐயுஎம்எல் (2), கேரள காங்கிரஸ் (எம்) (1) மற்றும் ஆர்எல்எஸ்பி (1) ஆகிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் (26), சமாஜ்வாதி (20), பகுஜன் சமாஜ் (15), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (19), டிஆர்எஸ் (16), பிஜு ஜனதா தளம் (13), அதிமுக (10), அமமுக (4), இடதுசாரி முன்னணி (8), ஆம் ஆத்மி (2), ஏஐயுடிஎப் (2), பிடிபி (1), ஜேவிஎம்-பி (1) மற்றும் ஏஐஎம்ஐஎம் (1) ஆகிய பிற கட்சிகள் 140 இடங்களில் வெற்றி பெறும்.

என்டிஏ கூட்டணிக்கு 37.15 சதவீதம், யுபிஏவுக்கு 29.9 சதவீதம், மற்ற கட்சிகளுக்கு 32.93 சதவீத வாக்குகள் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் சார்பில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கருத்து கணிப்பில் என்டிஏ கூட்டணி 281 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 124 இடங்களும் பிற கட்சிகளுக்கு 138 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பாஜக கூட்டணி 257 இடங்கள் டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு காங்கிரஸ் கூட்டணி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author