Published : 26 Jan 2019 10:13 AM
Last Updated : 26 Jan 2019 10:13 AM

காங்கிரஸில் வருண் காந்தியை கொண்டு வருவாரா பிரியங்கா?

காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சய் காந்தி, கடந்த 1980-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி டெல்லியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார். இதைத் தொடர்ந்து, சஞ்சயின் மனைவியான மேனகாவும், மகன் வருணும் காந்தி குடும்பத்தில் இருந்து விலகத் துவங்கினர்.

இதன் விளைவாக, பாஜகவில் சேர்ந்த மேனகா, தனது மகன் வருணையும் தம் கட்சிக்குள் கொண்டு வந்தார். தற்போது மத்திய மகளிர் மற்றும் குழந் தைகள் நலத்துறை அமைச்சராக மேனகாவும், அவரது மகன் வருண், உ.பி.யின் சுல்தான்பூர் தொகுதி எம்.பி.யாகவும் உள்ள னர்.

இதனிடையே, 2014-ல் அமித்ஷா தலைவரானதும் வருணுக்கு பாஜகவில் முக்கியத் துவம் குறையத் தொடங்கியது. அமித் ஷா அமைத்த கட்சி நிர்வாகத்தில் தேசிய பொதுச் செயலாளர் பதவியை வருண் இழக்க நேரிட்டது. அதேபோல், 2017-ம் ஆண்டு நடந்த உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பிரச் சாரம் செய்வதற்கும் வருண் காந்திக்கு வாய்ப்பு அளிக்கப் படவில்லை.

இந்நிலையில், அதிருப்திக்கு உள்ளான வருணை காங்கிரஸில் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. சகோதரர் வருணுடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவின் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நல்லமுறையில் தொடர்வதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளேட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ல் செய்தி வெளியாகி இருந்தது. இதுகுறித்து ராகுலிடம் பல முறை கேள்வியெழுப்பியபோதும், அதற்கு பதிலளிப்பதை அவர் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ராகுலின் சகோதரி பிரியங்கா காந்திக்கு காங்கிரஸில் பதவி வழங்கப்பட்டிருக்கும் சூழலில், வருணை அவர் காங்கி ரஸுக்கு அழைத்து வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று ஒடிஸா வந்திருந்த ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல், ‘வருண் காந்தி காங்கிரஸில் சேர்வது குறித்த செய்திகள் எனக்கு வரவில்லை.’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x