Published : 17 Jan 2019 10:52 AM
Last Updated : 17 Jan 2019 10:52 AM

குஜராத் அரசின் செயல்பாட்டை விடவா கேரள அரசு மோசமானது?- 2002 கலவரத்தைக் குறிப்பிட்டு மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

2002 கலவரத்தைக் கையாள்வதில் அப்போதைய குஜராத் அரசு செயல்பட்டதைவிடவா சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது? என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

அண்மையில் கொல்லம் சென்ற பிரதமர் மோடி, "சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு நடந்துகொண்ட விதம் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் கட்சியும் அரசாங்கமும் செய்திராத மோசமான செய்கை என்றளவில் வரலாறாகும்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்திய வரலாறு, கலாச்சாரம், ஆன்மிகம் மீது எவ்வித மதிப்பும் மரியாதையும் இல்லை என்பது எனக்குத் தெரியும் ஆனால் அவர்களது வெறுப்பு இந்த அளவுக்கு இருக்கும் என்பதுதான் தெரியாது" எனப் பேசியிருந்தார்.

இதற்கு அன்றைய தினமே கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பதிலடி கொடுத்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டரில், "அன்புள்ள ஐயா.. 2002 கலவரத்தைக் கையாள்வதில் அப்போதைய குஜராத் அரசு செயல்பட்டதைவிடவா சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது?" எனக் கேட்டுள்ளார்.

வழக்கம்போல் #justasking என்ற ஹேஷ்டேகின் கீழ் அவர் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் அரசியல் தாண்டி நடிகர் பிரகாஷ்ராஜ் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x