

மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் பிறந்தவர் நடிகை இஷா கோபிகர். 1998-ல் சந்திரலேகா தெலுங்குப் படம் மூலம் டோலி வுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் அகத்தியன் இயக்கிய காதல் கவிதை மூலம் நடிகர் பிரசாந்த் ஜோடி யாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து விஜய்யுடன் நெஞ்சினிலே, அரவிந்த்சுவாமி யுடன் என் சுவாசக் காற்றே, பிரசாந்துடன் ஜோடி, விஜயகாந் துடன் நரசிம்மா ஆகிய படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ளார். தற்போது கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். 2009-ல் டிம்மி நரங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். அவரை கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்து கட்சி வெற்றிக்காக பாடுபடுவேன் என்று இஷா கோபிகர் அப்போது அறிவித்தார்.