Last Updated : 27 Jan, 2019 04:02 PM

 

Published : 27 Jan 2019 04:02 PM
Last Updated : 27 Jan 2019 04:02 PM

டெல்லி-வாரணாசி இடையே செல்லும் நாட்டின் முதல் அதிவேக ரயில் இனி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும்: பியூஷ் கோயல் அறிவிப்பு

நம்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் 18 ரக ரயிலுக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியிலிருந்து வாரணாசிக்கு 160 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தயாரிக்க ரூ.97 கோடி செலவாகியுள்ளது.

இந்த ரயிலுக்கு புதிய பெயர்சூட்டப்பட்டது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புல்லட் ரயில் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் நாட்டிலேயே அதிகவேகமாக செல்லக்கூடியது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கடந்த 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே என்ஜின் இல்லாமல் முதன்முதல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் பேக்டரியில் கட்டப்பட்டதாகும்.

இது முழுக்கமுழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயில் இரண்டு பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.  இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

இது முழுக்க முழுக்க ஒரு மேட் இந்தியா ரயில் ஆகும். ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பதிலாக இயக்கப்படும் இந்த 'ரயில் 18' ரக ரயிலுக்கு பொதுமக்கள் பல்வேறு பெயர்களை பரிந்துரை செய்தனர். ஆனால் நாம் முடிவாக 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டி குடியரசு தின பரிசாக மக்களுக்கு வழங்குகிறோம். இந்த ரயிலை விரைவில் பிரதமர்ல மோடி கொடியசைத்து தொடங்கிவைப்பதார்.

இவ்வாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x