சைவ உணவுக்கு ஆதரவாக பிரச்சாரம்: போபாலில் ‘பெடா’ அமைப்பினர் மீது தாக்குதல்

சைவ உணவுக்கு ஆதரவாக பிரச்சாரம்: போபாலில் ‘பெடா’ அமைப்பினர் மீது தாக்குதல்
Updated on
1 min read

பக்ரீத் பண்டிகையின்போது அசைவ உணவுகளை தயாரிக்க வேண்டாம்; சைவ உணவுக்கு மாறுங்கள் என்று போபாலில் மசூதி ஒன்றின் வாசலில் பிரச் சாரம் செய்த விலங்குகள் நல அமைப்பான ‘பெடா’வின் பெண் உறுப்பினர் தாக்கப்பட்டார்.

ப‌க்‌ரீ‌த் ப‌‌ண்டிகையை மு‌ன்‌ னி‌ட்டு, ஒ‌ட்டக‌ங்க‌ள், ஆடு, மாடு களை கு‌ர்பா‌னி கொடு‌த்து, இறை‌ச்‌ சியை ஏழை ம‌க்க‌ள் ம‌ற்று‌ம் உற‌ வின‌ர்களு‌க்கு தானமாக‌க் கொடு‌ப் பது மு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌ன் வழ‌க்க‌ம்.

இந்நிலையில், பக்ரீத் பண்டி கையை சைவ உணவுடன் கொண் டாடுமாறு விலங்குகள் நலப் பாதுகாப்பு அமைப்பான ‘பெடா’ பிரச்சாரம் செய்து வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம், போபாலின் தாஜ் - உல் மசூதி முன்பு சைவ உணவு பிரச்சாரத்தை பெடா அமைப்பினர் நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு வந்த முஸ்லிம்கள், ‘பெடா’ அமைப்பின ருக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர், பெடா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தினர், பெரும் பாலான பெடா அமைப்பினர் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில், பெநாசீர் சுரையா என்ற பெண் மட்டும் அவர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை அங்கிருந்த போலீஸார் மீட்டு பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.

இது தொடர்பாக ‘பெடா’வுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நவீத் கான் கூறியதாவது: “பெடாவின் செயல், எங்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. அவர்களின் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும். எங்களின் மத நம்பிக்கைகள் மீதான தாக்குதலாகவே இதை நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

பெடாவின் தலைமைச் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா கூறும் போது, “அமைதியான முறையில் விலங்குகள் நலப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அனைத்து மதங்களின் பண்டி கைக் காலங்களிலும் ஏற்படுத்தி வருகிறோம். விலங்குகளை கொல்லக்கூடாது என்று அமைதி யாக பிரச்சாரம் செய்த எங்கள் அமைப்பினர் மீது வன்முறைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது வெட்க கரமானது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in