Published : 17 Jan 2019 08:45 AM
Last Updated : 17 Jan 2019 08:45 AM

கும்பமேளா விழா தொடக்கம்; 2 கோடி பேர் புனித நீராடல்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தரபிரதேசத்தில் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா விழா தொடங்கியது. முதல் நாளில் மட்டும் 2 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா விழா கோலாகலமாக நேற்று முன்தினம் தொடங்கியது. உலகில் அதிக அளவில் மக்கள் கூடும் விழாவான கும்பமேளா வுக்கு பாரம்பரிய, கலாச்சார விழா என்ற அங்கீகாரத்தை யுனெஸ்கோ கடந்த 2017-ம் ஆண்டு வழங்கியது.

கும்பமேளாவில் புனித நீராட நாடு முழுவதும் இருந்து கோடிக் கணக்கான மக்கள் செல்வார் கள். நேற்று முன்தினம் கும்பமேளா விழா தொடங்கியதையடுத்து, பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் மக்கள் தலைகளாக காட்சியளிக் கிறது. துறவிகள், மதத் தலைவர் கள், பக்தர்கள் குவிந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மகர சங்கராந்தி பண்டிகை விசேஷ நாள் என்பதால், முதல் நாளே 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள் ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியின் முயற்சியால் கும்பமேளா விழாவுக்கு சர்வ தேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்காக மோடிக்கு நன்றி தெரி விக்கிறேன். கோடிக்கணக்கான மக்கள் கூடிய முதல் நாள் விழாவை வெற்றிகரமாக நடத்தியதற்காக துறவிகள், பக்தர்கள், போலீஸார், கும்பமேளா விழா நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார்.

பக்தர்களுக்கு வசதிகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு விழாவுக் காக ரூ.4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால் கூறியுள்ளார். மார்ச் 4-ம் தேதி வரை விழா நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x