

ஹரியாணாவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
ஹரியாணாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் அசோசியேட்டட் ஜர்னல் (ஏஜேஎல்) நிறுவனத் துக்கு கடந்த 1982-ல் சி-17 என்ற மனைப்பிரிவு ஒதுக்கீடு செய்யப் பட்டது. 1992 வரை இதில் கட்டு மானப்பணி நடைபெறாததால் இந்த ஒதுக்கீடு திரும்பப் பெறப் பட்டது. இந்நிலையில் 2005-ல் இந்த நிலம் முந்தைய தொகைக்கே ஏஜேஎல் நிறுவனத்துக்கு மறு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அப்போதைய முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா, ஏஜேஎல் தலைவர் மோதிலால் வோரா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹரியாணா மாநிலம் குருகிராமில் கடந்த 2009-ல் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஹூடா மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக டெல்லி மற்றும் ரோட்டக் நகரில் உள்ள ஹூடாவின் வீடுகள் உட்பட 20 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக ஹூடா கூறும் போது, “இது அரசியல் பழிவாங் கும் நடவடிக்கை. எனது குரலை ஒடுக்க முயற்சிக்கின்றனர்” என் றார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறும்போது, “இந்தியாவை எதேச்சதிகார நாடாக பாஜக அரசு மாற்றி வரு கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் இரண்டு வித சட்டங்கள் உள்ளன. ஒன்று எதிர்க்கட்சிளுக்கு எதிராகவும் மற்றொன்று பாஜக முன்னாள் முதல்வர்களை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அரசுகள் நிரந்தரம் அல்ல. இதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த அரசு மாறியவுடன் அதிகாரி கள் தங்களின் கடந்த கால செயல் பாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்” என்றார்.