சபரிமலைக் கோயிலுக்குள் நுழைந்த இரு பெண்களும் மாவோயிஸ்டு தீவிரவாதிகள்: பாஜக பிரமுகர் சர்ச்சைக் கருத்து

சபரிமலைக் கோயிலுக்குள் நுழைந்த இரு பெண்களும் மாவோயிஸ்டு தீவிரவாதிகள்: பாஜக பிரமுகர் சர்ச்சைக் கருத்து
Updated on
1 min read

சபரிமலைக் கோயிலுக்குள் நுழைந்த இரு பெண்களும் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள் என்று பாஜகவைச் சேர்ந்த வி.முரளிதரன் புகார் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று (புதன்கிழமை) 40 வயதுகளில் உள்ள பிந்து மற்றும் கனகதுர்க்கா, இரு பெண்கள் நுழைந்து ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சி கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முரளிதரன் இன்று (வியாழன்) ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி:

நேற்று சபரிமலைக் கோயிலுக்குள் நுழைந்தவர்கள் பக்தர்கள் அல்ல. அவர்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளாக இருந்தவர்கள். சிபிஎம் கட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட போலீஸாருடன் தயார் செய்திருந்த திட்டத்தின் துணையோடுதான் இந்த மாவோயிஸ்டுகள் கோயிலுக்குள் நுழைந்துள்ளனர்.

இது இந்து ஆலயத்திற்கு எதிராக முதல்வர் பினராயி விஜயனின் சிபிஎம் கட்சியுடன்,  மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திட்டமிட்டு செய்த கூட்டுச்சதியாகும்.

கேரள இந்து ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட வெளிப்படையான தாக்குதல் இது. கேரளாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டுக்கும் நேற்று ஒரு கருப்பு தினம் ஆகும்.

இவ்வாறு முரளிதரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in