

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பெண்களுக்கு விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து 40-க்கும் மேற்பட்டோர் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில் தலைமை நீதிபதி முன்பு நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா, சபரிமலை தொடர்பான மனுக் களை அவசரமாக விசாரிக்குமாறு கோரிக்கை வைத்தார்.
அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறும்போது, “நீதிபதி இந்து மல்ஹோத்ரா 30-ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் உள்ளார். அவர் பணிக்கு திரும்பிய பிறகு விசாரணை தேதி முடிவு செய்யப்படும்” என்றார்.