

நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தேசிய நீதித்துறை புள்ளிவிவர தொகுப்பின்படி, கடந்த 2018-ம் ஆண்டு முடிவில் நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் 2 கோடியே 91 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
உயர் நீதிமன்றங்களில் ஒவ் வொரு நீதிபதியிடமும் 4,419 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழ் நீதிமன்ற நீதிபதி களிடம் தலா ரூ.1,288 வழக்குகள் உள்ளன. நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 47 லட்சத்து 68 ஆயிரம் வழக்கு கள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தெலங்கானா மாநிலத்துக்கு புதிய உயர் நீதிமன்றம் உருவாக் கப்பட்டது. அதன்பின் உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
உயர் நீதிமன்றங்களில் அனு மதிக்கப்பட்ட நீதிபதிகள் எண் ணிக்கை 1,079. ஆனால், தற்போது 695 பேர் மட்டுமே உள்ளனர். 384 நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது. கீழ் நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுகிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு சட்ட அமைச்சர்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர்.
மத்திய சட்டத் துறை அமைச்சராக உள்ள ரவிசங்கர் பிரசாத் கூட சமீபத்தில் இதை வலியுறுத்தி தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இவ்வாறு சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. - பிடிஐ