‘பாபநாசம்’ பட பாணியில் இளம்பெண் கொலை: போலீஸ் விசாரணையைக் குழப்பிவிட்ட பாஜக பிரமுகர், மகன்கள் கைது

‘பாபநாசம்’ பட பாணியில் இளம்பெண் கொலை: போலீஸ் விசாரணையைக் குழப்பிவிட்ட பாஜக பிரமுகர், மகன்கள் கைது
Updated on
2 min read

பாபநாசம் பட பாணியில் இளம்பெண்ணைக் கொலை செய்து, போலீஸார் விசாரணையைக் குழப்பிவிட்ட பாஜக பிரமுகர், அவரின் மகன்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

மலையாளத்தில் வந்த திரிஷியம் திரைப்படம், இந்தியில் திரிஷியம் என்றும், தமிழலில் பாபநாசம் என்றும் எடுக்கப்பட்டது. இதில் இந்தியில் திரிஷியம் படத்தில் அஜெய் தேவ்கான் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, திரைப்படத்தில் வருவதுபோல் கொலை செய்து போலீஸாரை குழப்பியுள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் இந்த கொலைச் சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக போலீஸாருக்கு எந்தவிதமான துப்பும் கிடைக்காமல் விசாரணை குழப்பத்துடன் சென்ற நிலையில், இப்போது குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.

இது குறித்து இந்தூர் போலீஸ் டிஐஜி ஹரிநாராயணாச்சாரி மிஸ்ரா கூறியதாவது:

இந்தூரைச் சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகர் ஜக்தீஸ் கரோடியா என்கிற கல்லு பல்வான்(வயது 65). இவருக்கு அஜெய்(36), விஜய்(38), வினய்(31) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். பாஜக பிரமுகர் ஜக்தீஸ் கரோடியாவுக்கும், பங்கானா பகுதியைச் சேர்ந்த டிவிங்கில் டாக்ரே(22) என்கிற இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கம் தீவிரமானதால், கரோடியா குடும்பத்துக்குள் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்துக்குள் டிவிங்கில் கரோடியா வீட்டிலேயே தங்கத் தொடங்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கரோடியாவின் மகன்கள் 3 பேரும், அவர்களின் நண்பர்கள் நீலிஷ் காஷ்யப்(28) ஆகியோரும் சேர்ந்து டிவிங்கில் டாக்ரேயை கொலை செய்ய திட்டமிட்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு, அக்டோபர் 16-ம் தேதி ஒரு திரையரங்கில் திரிஷியம் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, டிவிங்கில் வீட்டுக்குச் சென்று அவரைக் கழுத்தை நெறித்து இந்த 4 பேரும் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் மறைவான இடத்தில் கொண்டு சென்று எரித்துள்ளனர்.

வேறுஒரு இடத்தில் நாயின் உடலை புதைத்துவைத்து, இங்கு ஏதோ பெண்ணின் உடல் இருப்பது போன்று தோற்றத்தை ஏற்படுத்தினார்கள், அப்பகுதி மக்களிடமும் மனித உடலைப் புதைத்துவிட்டதாகவும் வதந்திகளைக் கிளப்பிவிட்டனர். ட்விங்கில் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த நேரத்தில் குழிக்குள் இருக்கும் உடலை போலீஸார் எடுத்தபோது அது ட்விங்கில் உடலாக இருக்கும் என சந்தேகித்தனர். ஆனால் அதை ஆய்வு செய்தபோது அது நாயின் உடல் எனத் தெரியவந்தது. இதனால், தீவிரமாகச் சென்ற போலீஸாரின் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, போலீஸார் ட்விங்கில் தொடர்பு வைத்திருந்த பாஜக பிரமுகர் கரோடியா, அவரின் மகன்கள் ஆகியோரைத் தீவிரமாக விசாரித்தனர். அவர்கள் முதன்முதன்முறையாக, மூளைக்கு மின் அலைகளைச் செலுத்தி உண்மை கண்டறியும் சோதனைக்கு அறிவியல் ரீதியாக உட்படுத்தினார்கள். இந்தூர் போலீஸார் முதன்முறையாக இந்த முறையை இந்தவழக்கில் இதைப் பயன்படுத்தினார்கள்.

இந்த விசாரணையில் குற்றவாளிகள் அளிக்கும் பதில்களுக்கு ஏற்றார்போல், அவர்கள் யோதித்து பதில் அளிக்கிறார்களா, அல்லது உடனுக்குடன் பதில் அளிக்கிறார்களா என்பதையு மூளையின் நரம்பு உணர்வுகளை வைத்துக் கண்டுபிடித்தோம். இதில் கரோடியா அவரின் மகன்கள் அனைவரும் முரணான தகவல்களைத் தெரிவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், டிம்பிளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

கொலை செய்வதற்கு முன் திரிஷியம் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதுபோல் மனித உடலுக்குப் பதிலாக நாயைப் புதைத்துவைத்து போலீஸார் விசாரணையைக் குழப்ப முயன்றுள்ளதைத் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் உள்பட 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in