Last Updated : 23 Jan, 2019 07:35 PM

 

Published : 23 Jan 2019 07:35 PM
Last Updated : 23 Jan 2019 07:35 PM

பலருக்கு குடும்பமே கட்சி...பாஜகவுக்கோ கட்சி என்பது ஒரு குடும்பம்: பிரியங்கா பதவி குறித்து பிரதமர் மோடி சூசகச் சாடல்

பிரியங்கா வத்ராவுக்கு காங்கிரஸில் முக்கியப் பதவி அளித்து உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் தலைமையாக நியமிக்கப்பட்டதையடுத்து ‘குடும்ப அரசியல்’ என்று பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பிரதமர் மோடியும் பிரியங்கா நியமனத்தை சூசகமாக விமர்சனம் செய்துள்ளார்.

 

பாஜக-வின் ரத்த நாளங்களில் உள்ளது ஜனநாயகம் என்பது ஆனால் பலருக்கும் குடும்பம்தான் கட்சியாக உள்ளது, அதாவது பலருக்கும் குடும்பமே கட்சி, ஆனால் பாஜகவுக்கோ கட்சி என்பது ஒரு குடும்பம்.

 

நம் கட்சியில் கட்சித் தொண்டர்கள் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்படும், ஆனால் வேறு கட்சியில் ஒரு தனிநபரின் விருப்பமே கட்சியின் விருப்பம் என்று உள்ளது.

 

ஜனநாயகம் என்பது பாஜகவின் ரத்த நாளங்களில் ஓடுகிறது, அதனால்தான் நாட்டு மக்கள் பாஜகவுடன் இன்னும் நெருக்கமாகி வருகிறார்கள்.

 

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி., பாரமதி, கட்சிரோலி, ஹிங்கோலி, நாந்தத், நந்தர்பர் பாஜக வாக்குச்சாவடி தொண்டர்களிடையே உரையாடும் போது குறிப்பிட்டார்.

 

மேலும் பாஜகவில் பலரும் பிரியங்கா நியமனத்தையும் காங்கிரஸின் குடும்ப அரசியலையும் இணைத்து கேலி செய்து வருகின்றனர்.

 

தம் ட்விட்டரில் பிரியங்காவிற்கு வாழ்த்து கூறிய மத்திய இணை அமைச்சரான பாபுல் சுப்ரியோ, ‘இந்த மாற்றம் ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. அரசியலை பற்றி எந்த அறிவும் இல்லாதவருக்கு திடீர் என முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x