நித்யானந்தாவுக்கு புதிய‌ நெருக்கடி: மாணவர்களை பாத பூஜைக்கு கட்டாயப்படுத்துகிறாரா? - கன்னட அமைப்புகள் போர்க்கொடி

நித்யானந்தாவுக்கு புதிய‌ நெருக்கடி: மாணவர்களை பாத பூஜைக்கு கட்டாயப்படுத்துகிறாரா? - கன்னட அமைப்புகள் போர்க்கொடி
Updated on
1 min read

கர்நாடகத்தில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களை பாத பூஜை செய்ய கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் நித்யானந்தாவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நித்யானந்தாவின் தியானபீடம் ஆசிரமம் பெங்களூரை அடுத்த பிடதியில் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் 'நித்யானந்தா குருகுல உண்டு உறைவிட‌ப் பள்ளி' செயல்பட்டு வருகிறது. வார இறுதிநாட்களில் யோகா பயிற்சிப்பள்ளியும் இயங்குகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிய‌ர் படித்து வருகின்றனர்.

ஆசிரமத்திற்கு வெளியே 'நித்யானந்தா வித்யாலயா' என்ற ஆங்கில வழி பள்ளியை அவருடைய பக்தர்கள் நடத்தி வருகின்றனர். சுமார் 500 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிகளுக்கு நித்யானந்தா அடிக்கடி வந்து, மாணவர்களுக்கு ஆன்மீக வகுப்புகள் நடத்துவது வழக்கம் என்கிறார்கள்.

கட்டாய பாத பூஜை?

கன்னட சலுவள கட்சி, கன்னட நவநிர்மாண் வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் நித்யானந்தாவுக்கு எதிராக புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளன.

பிடதி ஆசிரமத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந் தைகள் மாதந்தோறும் பவுர்ணமி அன்று, இதர திருவிழா நாட்களின் போதும் நித்யானந்தாவிற்கு பாத பூஜை செய்கிறார்கள்.

சில நேரங்களில் நித்யானந்தா விற்கு பாத பூஜை செய்யும்படி மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படு கிறார்கள். கன்னட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலையை உடனடியாக தடுக்க வேண்டும் என அந்த அமைப்பினர் கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு மனு அளித்துள்ளனர்.

விசாரிக்க முடிவு

மனு குறித்து கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உமா யிடம் கேட்ட போது, '' கட்டாய பாத பூஜை குறித்து விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். விசா ரணையின் போது இத்தகைய சம்பவங்கள் உண்மை என தெரிய வந்தால், நித்யானந்தா மீது நட வடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

பிடதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்ட போது, “மாணவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க நித்யானந்தா நல்வழி காட்டுகிறார். அவருக்கு எதிராக எந்த குழந்தை புகார் கொடுத்தது?''என எதிர்க் கேள்வி கேட்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in