

காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம், தாங்தார் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில், இந்திய எல்லையில் ஊடுருவ 200 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.