Last Updated : 17 Jan, 2019 07:01 PM

 

Published : 17 Jan 2019 07:01 PM
Last Updated : 17 Jan 2019 07:01 PM

10% இடஒதுக்கீட்டுத் திட்டத்தை அமல்படுத்த 40 ஆயிரம் கல்லூரிகளில் சீட்கள் அதிகரிக்கப்படுகின்றன: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நடைமுறைக்கு வருவதற்குத் தோதாக 40,000 கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்கப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

 

“இந்தப் புதிய இட ஒதுக்கீடு 900 பல்கலைக் கழகங்களில், 40 ஆயிரம் கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டு முதல்  அமல்படுத்தப்படும். இடங்களின் எண்ணிக்கை 10% அதிகரிக்கப்படும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

1,500 படுக்கைகள் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி,  “பொருளாதார இட ஒதுக்கீடு ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டைப் பாதிக்காதவாறு வழங்கப்பட்டுள்ளது, என் அரசு சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்க கடமையாற்றுகிறது, இந்த மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் ஏழைகளுக்கும் வசதியாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைக்கப்படுகிறது.

 

100 நாட்களில் 7 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஹெலிபேட் உள்ள முதல் அரசு மருத்துவமனை இதுதான். இது இந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை தேவைகளை நிறைவு செய்யும்.

 

சர்தார் படேல் மேயராக இருக்கும் காலத்திலிருந்தே அஹமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பிரதான திட்டம் சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்பதாகவே இருந்து வந்துள்ளது. இந்த மருத்துவமனைத் திட்டம் 2012-ல் தொடங்கப்பட்டது, இப்போது இது உருவான விதம் பார்த்து நான் மயங்கி விட்டேன்.”

 

இவ்வாறு கூறினார் பிரதமர் மோடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x