

ஜம்மு காஷ்மீரில் 11 நாள்களாக மூடப்பட்டிருந்த அம்மாநில தலைமைச் செயலகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் தரைத் தளத்தில் மூன்றடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருந்ததால் பணிகள் நடைபெற வில்லை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகி யிருக்கிறார்கள். 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளார் கள். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை ராணுவம் மீட்டு வருகிறது. இந்த நிலையில், 18-ம் தேதி முதல் தலைமைச் செயலகம் இயங்கும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தது. ஆனால் இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
“எங்களால் எப்படி அலுவலகம் வரமுடியும் என்று எதிர்பார்க்கிறார் கள்? இன்னமும் தரைத்தளத்தில் தண்ணீர் மூன்றடிக்கு இருக்கிறது” என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
தலைமைச் செயலகத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. 7 மாடிகள் கொண்ட அந்தக் கட்டிடத்தில், தரைத்தளம் வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்தபடி தலைமைச் செயலகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் 4000 ஊழியர் களில் 10 சதவீதத்துக்கும் குறை வான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தார்கள்; பாதுகாவலர் களிடம் இருந்த வருகைப் பதி வேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி னார்கள்.
வனத்துறை அமைச்சர் மியான் அல்டஃப், நிதித்துறை அமைச்சர் அப்துல் ரஹிம், சுற்றுலா துறை அமைச்சர் ை குலாம் அஹமத் மிர் ஆகியோர் தலைமைச் செயலகத் துக்கு வருகை தந்தார்கள். ஆனால் தலைமைச் செயலகத்தின் தரைத்தளத்தில் தண்ணீர் தேங்கி யிருந்ததால் அவர்களால் உள்ளே நுழையமுடியவில்லை. பிறகு சட்டசபை வளாகத்தின் உள்ளே சென்றார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அமைச்சர்கள்
மாநில அமைச்சர்கள் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பணி களைக் கண்காணித்து வரு கிறார்கள்.
மக்களுக்குத் தற்காப்பு நடவடிக் கைகள் தொடர்பான ஆலோசனை கள் தொடர்ந்து அளிக்கப்படுவதாக அமைச்சர்களிடம் அரசு நிர்வாகத் தினர் தெரிவித்தார்கள்.
வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிவாரண முகாம் களில் சமுதாயக்கூட சமையல றைகள் அமைக்கப்பட்டது பற்றி அவர்களுக்குத் தெரிவிக் கப்பட்டது.
நிவாரணப் பணிகளை துரிதப் படுத்த மாவட்ட நிர்வாகத்தினருக்கு அமைச்சர் குழு உத்தரவிட்டது. வெள்ளத்தால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு நிதி உதவியும் வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு முதல் தவணையாக ரூ. 75,000 வழங்கவும் கட்டளை யிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட 41,000 மக்கள் 87 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளார்கள். அவர்களுக்கு உணவு உள்பட பல வசதிகளும் செய்யப் பட்டுள்ளதாகவும் அவர்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்துவதா கவும் அமைச்சர் குழுவிடம் தெரி விக்கப்பட்டது.
ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு
காஷ்மீரில் கடந்த இரு வாரங்களாக நீடித்த கனமழை வெள்ளத்தால் ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில தொழில் வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளது.
வர்த்தகர்களுக்கும், வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக ஈடு செய்ய வேண்டுமெனவும் அந்த சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் வேளாண் பொருள்களும், உற்பத்தி பொருள்களும் சேதமடைந்தன. மாநிலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கின.
இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட இழப்பு ரூ.60 ஆயிரம் கோடி என அந்த மாநில தொழில் வர்த்தக சம்மேளனம் கணித்துள்ளது.