Last Updated : 19 Jan, 2019 08:23 AM

 

Published : 19 Jan 2019 08:23 AM
Last Updated : 19 Jan 2019 08:23 AM

எளிதான வர்த்தகம் செய்ய ஏற்ற உலக நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் 50 இடங்களுக்குள் வரும்: குஜராத் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

எளிதான வர்த்தகம் செய்ய ஏற்ற உலக நாடுகள் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் ஆண்டு தோறும் ‘வைப்ரன்ட் குஜராத்’ (துடிப் பான குஜராத்) என்ற பெயரில் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, 9-ம் ஆண்டு உச்சி மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பிரதமராக நான் பதவியேற்ற பின்னர் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பணிகளை மத்திய அரசு வேகமாக செய்து வருகிறது. சீர்திருத்தம், செயல்பாடு, புத்தாக்கம், மீண்டும் செயல்பாடு என்ற தாரக மந்திரத்தை முன்வைத்து அரசு நிர்வாகம் மிகத் திறமையாக பணியாற்றி வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்காக நேரடி அந்நிய முதலீட்டுக்கு அதிக முக்கியத் துவத்தை மத்திய அரசு அளித்து வரு கிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 90 சதவீத அனுமதி உடனடியாக வழங் கப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

மத்திய அரசின் பல்வேறு நலத் திட் டங்கள் அனைத்து மாநிலங்கள், அனைத்துப் பிரிவு மக்களை சென் றடைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தத் திட்டங்கள் மூலம் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள சமூகங்கள் முன்னேற்றம் அடைய முடியும். மக்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்தவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

1991-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாகத்தான் சராசரியான பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், பணவீக்கம் 4.6 சதவீதமாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது.

உலக வங்கியின் அட்டவணைப்படி எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 75 இடங் கள் முன்னேறி தற்போது 77-வது இடத்தைப் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் முதல் 50 நாடுகள் பட்டியலில் இடம் பெறும் வகையில் நமது நடவடிக்கைகள் வேகமாக அமைய வேண்டும் என்று எனது குழுவினருக்கு வலியுறுத்தியுள்ளேன்.

இந்தியாவில் வர்த்தகம் செய் வதற்கு உலக நாடுகளை கவரும் வண்ணம் நமது ஒழுங்குமுறைகள், செயல்முறைகள் மிகச் சிறந்ததாக அமைய வேண்டும் என விரும்பு கிறேன். மேலும் மிகக் குறைந்த செலவில் வர்த்தகம் செய்வதற்கான சூழ்நிலைகளையும் ஏற்படுத்தியுள் ளோம். வர்த்தகத்தில் இந்தியா சாதனை செய்வதற்காக இருந்த தடைகளை உடைத்தெறிந்து விட்டோம். வர்த்த கத்தில் தொடர் சாதனை புரிய, இந்தத் துறையில் சீர்திருத்தங்கள் தொடரும்.

ஜிஎஸ்டி வரிகள் அமல்படுத்துதல் மற்றும் எளிமையாக்கல், வரி ஒருங் கிணைப்பு போன்றவற்றால் சரக்கு களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுவதற்கான செலவு மிகவும் குறைந்துவிட்டது. டிஜிட்டல் செயல்பாடுகள், ஆன்-லைன் பரிவர்த் தனைகள், ஒருமுனை பயன்பாடுகள் போன்றவற்றால் வர்த்தகத்தை வேக மாக செய்ய முடிகிறது.

நாட்டில் அதிக வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும். அதற்கு சிறப்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை. இவை இரண்டும் முதலீடுகளுடன் சம்பந்தப்பட்டவை.எனவே, கடந்த சில ஆண்டுகளாக உற்பத்திக்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவத்தைத் தந்தது.

இவ்வாறு மோடி பேசினார்.

இந்த உச்சி மாநாட்டில் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, உதய் கோட்டக், குமாரமங்கலம் பிர்லா, கவுதம் அதானி, ஆதி கோத்ரெஜ், பங்கஜ் படேல் மற்றும் பிஏஎஸ்எஃப், டிபி வேர்ல்ட், சுசூகி, வான்கார்ட், மாயர்ஸ்க் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள், மிகப்பெரிய நிறுவனங் களின் தலைமைச் செயல் அதிகாரி கள் பங்கேற்றனர். மாநாட்டில் 30 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ‘துடிப் பான குஜராத்’ என்ற உச்சி மாநாடு, குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x