Last Updated : 26 Jan, 2019 05:34 PM

 

Published : 26 Jan 2019 05:34 PM
Last Updated : 26 Jan 2019 05:34 PM

50,000 பரிந்துரைகள், 112 விருதுகள்: மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயி, கண் மருத்துவர், கபடி வீரர் பத்ம விருதுக்குத் தேர்வு

பத்ம விருதுகளுக்கு ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் பரிந்துரை செய்யப்பட்டாலும் மக்காச்சோளம் பயிர் செய்த விவசாயி, கண் மருத்துவர், கபடி வீரர் உள்ளிட்ட 112 பேர் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.வி. ரமணி பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமூகத்துக்குச் சுயநலமற்ற சேவை செய்தோர், அனைத்து சமூக மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்கள், துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டோர், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டு விருதுகளுக்குதேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் பரிந்துரைக்கும் நடைமுறை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2010-ம் ஆண்டில் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எண்ணிக்கை 1,313 ஆக இருந்தது. 2016-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 768 ஆக உயர்ந்தது.

இந்த ஆண்டு 49 ஆயிரத்து 992 பரிந்துரைகள் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், அதில் சிறந்த குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுக்கு 4 பேரும், 14 பேர் பத்ம பூஷண்க்கும், 94 பேர் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கணக்கிட்டால், 20 சதவீதம் விருது பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 2,200 விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருந்தது என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

9 மாநிலங்களில் இருந்து  12 விவசாயிகள் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. காளாண், பேபிகார்ன் பயிரிட்ட கன்வால் சிங் சவுகான், கேரட் பயிரிட்ட விவசாயி வல்லபாய் வஸ்ரம்பாய் மர்வன்யா, காலிபிளவர் பயிரிட்ட ஜக்திஸ் பிரசாத் பாரிக், நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு பயிரிட்ட பாரத் பூஷன் தியாகி, ராம் சரண் வர்மா, வெங்கடேஷ்வர ராவ் யாதலபள்ளி ஆகியோர் பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய விவசாயத்தையும், இயற்கை வேளாண்மையையும் கடைபிடித்துவரும்  கமலா பூஜாரி, ராஜ்குமாரி தேவி, பாபுலால் தையா, ஹக்கும்சந்த் பட்டிதார் ஆகியோர், மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் நரேந்திர சிங், மீன் பண்ணை வைத்திருக்கும் சுல்தான் சிங் ஆகியோரும் பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

பணத்தைப் பெரிதாக மதிக்காமல் பொது மக்களுக்கு சேவை செய்த 11 மாநிலங்களைச் சேர்ந்த டாக்டர்கள் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.வி. ரமணி, உமேஷ் குமார் பாரதி (ரேபிஸ் சிகிச்சை), சுதம் காடே, ராமசாமி வெங்கடசாமி(தீக் காயம்), பிரதாப் சிங் ஹர்தியா(காட்ராக்ட் மற்றும் மையோபியா), சியாமா பிரசாத் முகர்ஜி (ஜார்கண்ட்), ஸ்மிதா ரவிந்திர கோலே(மஹாராஷ்டிரா), நர்போ (லடாக்), இலியாஸ் அலி (அசாம்), அசோக் லஷ்மணராவ் குகாதே (மஹாராஷ்டிரா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிவரும் டாக்டர் ஜகத் ராம் (சண்டிகர்), சாப்தாப் முகமது (லக்னோ), சந்தீப் குலேரியா (டெல்லி), மாமென் சண்டி (கொல்கத்தா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

விளையாட்டு வீரர்கள்

விளையாட்டுத்துறையில்  9 பிரிவுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பாம்பேலா தேவி லஷிராம்(வில்வித்தை), பிரசாந்த் சிங் (கூடைப்பந்து), ஹரிகா துரோணாவள்ளி (செஸ்), கவுதம் கம்பீர் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), அஜெய் தாக்கூர் (கபடி), பச்சேந்திரி பால்(மலைஏற்றம்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), பஜ்ரங் பூனியா (மல்யுத்தம்)

மேலும், சோசலி தலைவர் ஹக்கும்தேவ் நாரயண் யாதவ், பழங்குடியினத் தலைவர் கரிய முண்டா, சீக்கியத் தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சா, தலித் பிரிவைச் சேர்ந்த பெண் தலைவர் பாகிரதி தேவி உள்ளிட்டோர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x