Published : 29 Jan 2019 08:43 PM
Last Updated : 29 Jan 2019 08:43 PM

முதல்வர் கலந்து கொண்ட விழாவில் கருப்புச் சட்டை அணிந்த 3 வயதுக் குழந்தைக்கு அனுமதி மறுப்பு

அஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கருப்புச் சட்டை அணிந்து வந்ததால்  3 வயது குழந்தையை அனுமதிக்காதது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

 

அடிக்கல்நாட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள அஸாம் முதல்வர் சோனோவால் வந்தார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் கருப்புச் சட்டை அணிந்து வந்த  3 வயது குழந்தையை உள்ளே வர அனுமதி மறுத்தது சர்ச்சையானது.

 

“பாதுகாப்பு காவலர் என் மகனை உள்ளே விட அனுமதிக்கவில்லை, காரணம் அவன் கருப்புச் சட்டை அணிந்திருந்தானாம்” என்று குழந்தையின் தாயார் தெரிவித்தார்.

 

இதனையடுத்து அசாம் முதல்வர் சோனோவால் அசாம் டிஜிபி குலதர் சிகியாவை அழைத்து இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

அசாம் மாநிலத்தில் குடிமக்கள் திருத்தச் சட்ட சர்ச்சைகளை அடுத்து ஆட்சியாளர்கள் எங்கு சென்றாலும் கருப்புக் கொடி காட்டுவது, கருப்புச் சட்டை அணி போராட்டம் நடத்துவது வாடிக்கையாகி வருவதால் பாதுகாப்பு அதிகாரிகள் கருப்பு என்றாலே  கடுமை காட்டி வருகின்றனர்.

 

பாஜகவும் பிற ஆதரவு அமைப்புகளும், கட்சிகளும் இவர்களுக்கு எதிராக வெள்ளைக்கொடி போராட்டம் நடத்துவதும் சகஜமாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x