

அந்தமானின் வடக்குப் பகுதியில் உள்ள திக்லிபூரை அடுத்த ஷிப் பூரில், கடற்படைக்கு சொந்த மான விமான நிலையம் 2010 முதல் செயல்பட்டு வந்தது. இங்கு பெரும்பாலான வசதிகள் இல்லை.
இந்நிலையில், இந்த நிலை யம் மேம்படுத்தப்பட்டு, ‘ஐஎன்எஸ் கொஹஸா’ விமானப் படை தளம் என பெயர் மாற்றப் பட்டுள்ளது. எரிபொருள் கிடங்கு, பழுதுபார்ப்பு வசதி உள்ளிட்ட வசதிகள் இங்கேயே கிடைக்கும்.
இதை கடற்படை தளபதி சுனில் லன்பா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அந்த மான் பகுதிக்கான கமாண்டர் விமல் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது அந்தமானில் அமைந் துள்ள 3-வது கடற்படை விமானப் படை தளம் ஆகும்.