

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி பகுதியில் நேற்று நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத் தப்பட்டது. அதன் பின்னர், சந்திர பாபு நாயுடு பேசியதாவது:
தமிழகத்தை பல்வேறு துறை களில் முன்னேற்றிய பெருமை கருணாநிதியை மட்டுமே சாரும். அவருடைய பேச்சாற்றல் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் திமுகவில் இணைந் தனர். இந்திய அரசியலில் பழம்பெரும் அரசியல் ராஜ தந்திரியை இந்த நாடு தற்போது இழந்து நிற்கிறது.
தமிழகத்தின் முடி சூடா மன்னனாகவும், 50 ஆண்டுகளுக் கும் மேலாக தென்னிந்தியாவின் முக்கிய அரசியல்வாதியாகவும் கருணாநிதி விளங்கினார். அவர் கலைத்துறையில் சாதித்ததும் எண்ணில் அடங்காதவை.
தமிழகத்தில் பல்வேறு சமூக மாற்றங்களை அரங்கேற்றியவர் கருணாநிதி. அவருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1996-ம் ஆண்டில் மத்தியில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியை ஏற்படுத்தியதில் கருணாநிதி முக்கியப் பங்கு வகித்தார்.
இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொண்ட ஒரு பிதாமகன். அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.