சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா வீட்டை விட்டு விரட்டியடிப்பு

சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா வீட்டை விட்டு விரட்டியடிப்பு
Updated on
1 min read

ஐயப்பனை தரிசித்து வந்த பின்னர் கனகதுர்கா தனது குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டார். நீ பாவம் செய்துவிட்டாய் என்று அவர் குடும்பத்தாரே அவரைத் தூற்றினர். மேலும் கனகதுர்கா தனது மாமியாரால் அடித்து உதைக்கப்பட்டார். இதையடுத்து மலப்புரம் அரசு மருத்துவமனையில் கனகதுர்கா சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் தனது மருமகள் கனகதுர்காதான் தன்னை அடித்து உதைத்தார் என மருத்துவமனையில் அவரது மாமியாரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் நீ செய்த பாவங்களை கழுவிவிட்டு வா. அப்போதுதான் உனக்கு இந்த வீட்டில் இடம். கோயிலுக்குள் நுழைந்து சடங்குகளை மாற்றிவிட்டாய். எனவே பொது இடத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறி அவரை அவரது குடும்பத்தாரே விரட்டியடித்துள்ளனர்.

கனகதுர்காவின் கணவர் அரசு ஊழியர் ஆவார். இதைத் தொடர்ந்து பெரிந்தலமன்னா பகுதியிலுள்ள அரசு விடுதியில் நேற்று கனகதுர்கா தஞ்சம் புகுந்துள்ளார். கோயிலுக்குச் சென்று வந்ததற்காக பகிரங்கமாக பொதுமக்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே அவரை ஏற்போம் என்று கனகதுர்காவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in