Last Updated : 20 Jan, 2019 12:27 PM

 

Published : 20 Jan 2019 12:27 PM
Last Updated : 20 Jan 2019 12:27 PM

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ‘டிஸ்சார்ஜ்’

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நெஞ்சு வலி, மற்றும் சுவாசக் கோளாறு தொடர்பான பிரச்சினைகளுக்காக கடந்த 16-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அன்று இரவு 9 மணி அளவில் வார்டில் அமித் ஷா சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர் குழுவின் கண்காணிப்பில், அமித் ஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் சீரான நிலையில் இன்று அமித் ஷா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “ பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பாஜக தலைவர் அமித் ஷா உடல்நலம் பெற்று இன்று காலை 10.20 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் “ எனத் தெரிவித்தனர்.

பாஜகவின் தகவல்தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் கூறுகையில், “ அமித் ஷா நலமாக இருக்கிறார், மருத்துவமனையில் இருந்து உடல்நலம்பெற்று வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்தவர்களுக்கும், வாழ்த்தியவர்களுக்கும் நன்றி “ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x