

பசுக்களின் பெயரால் தேர்தலில் வாக்கு கோருபவர்கள் அவைகளுக்கு தீனியும் அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். பாஜகவ தாக்கும் வகையில் அவர் தன்னை சந்திக்க வந்த கோசாலை நடத்துபவர்களிடம் இதை தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜ்ரிவால் தம் மாநில வளர்ச்சித்துறை அமைச்சர் கோபால் ராயுடன் இன்று டெல்ல்லியில் பவானாவிலுள்ள ஒரு கோசாலைக்கு சென்றிருந்தார். ’ஸ்ரீகிருஷ்ணா கோசாலா’ எனும் பசுபாதுகாப்பகத்திற்கு சென்றிருந்தார்.
மேற்கு டெல்லி மாவட்டத்தின் அந்த மாநகராட்சி பாஜகவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்கிருந்து வரவேணிடிய பசுப்பாதுகாப்பு நிதி கடந்த இருவருடங்களாக கிடைக்கவில்லை என கோசாலை நடத்துபவர்கள் புகார் முதல்வர் கேஜ்ரிவாலிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால் கூறும்போது, ‘எங்கள் கட்சி பசுக்களின் பெயரால் வாக்கு சேகரிப்பதில்லை. பசுக்களின் பெயரால் வாக்கு சேகரிப்பவர்கள் அதற்கு தீனியையும் அளிப்பது அவசியம்.’ எனத் தெரிவித்தார்.
இதுபோல், பசுக்களின் பெயரால் அரசியல் செய்வது தவறு எனவும் கூறிய கேஜ்ரிவால், உடனடியாக அதற்கான நிதியை டெல்லியின் முனிசிபல் மாநகராட்சி வழங்க வலியுறுத்தினார்.
பிராணிகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு குறித்து டெல்லி அரசு சமீபத்தில் ஒரு கொள்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியின் சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா கோசாலாவில், 7.552 பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன