பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் ஹர்த்திக் படேல் போட்டி? - எதிர்க்கட்சிகள் அதிரடி வியூகம்

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் ஹர்த்திக் படேல் போட்டி? - எதிர்க்கட்சிகள் அதிரடி வியூகம்
Updated on
1 min read

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் ஹர்த்திக் படேலை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருந்தே பெரும்பாலன பிரதமர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் தான் கடந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது, வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதுபோலவே பிரதமர் மோடியை வீழ்த்தவும் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தி அவரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் குஜராத்தைச் சேர்ந்த படேல் சமூகத் தலைவர் ஹர்த்திக் படேலை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஹர்த்திக் படேல் வாரணாசியில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடனேயே அவர் மக்களை சந்திப்பதாக கூறப்படுகிறது. எனினும், ஹர்த்திக் படேலை இது பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும், அனைத்துக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஏற்கும் பட்சத்தில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறத.

ஹர்த்திக் படேல் வாரணாசியில் போட்டியிட்டால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in