சத்ருஹன் சின்ஹாவுக்கு விஐபி சலுகை திடீர் ரத்து

சத்ருஹன் சின்ஹாவுக்கு விஐபி சலுகை திடீர் ரத்து
Updated on
1 min read

பாஜக அதிருப்தி தலைவர் சத்ருஹன் சின்ஹாவுக்கு வழங்கப்பட்டு வந்த விஐபி சலுகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகவும், நட்சத்திர பேச்சாளராகவும்  நடிகர் சத்ருஹன் சின்ஹா இருந்தார். பாஜகவின் முக்கிய தலைவராகவும் அவர் இருந்து வந்தார்.

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் பாட்னா சாகேப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோதிலும், கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்  சத்ருகன் சின்ஹா.

இந்தநிலையில், பாட்னா விமான நிலையதத்தில் உள்ளூர் எம்.பி என்ற முறையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து பாட்னா விமான நிலைய இயக்குநர் ராஜேந்திர சிங் கூறுகையில் ‘‘முன்னாள் அமைச்சர் மற்றும் உள்ளூர் எம்.பி என்ற முறையில் இதுவரை சத்ருஹன் சின்ஹாவுக்கு வழங்கப்பட்டு வந்த விஐபி சலுகை ஒவ்வொரு முறையும் நீட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது நீட்டிக்கப்படவில்லை. விமானம் ஏறும் இடம் வரையில் அவருடைய வாகனம் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இனிமேல் அந்த வசதி வழங்க வாய்ப்பில்லை’’ என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in