Published : 24 Dec 2018 09:36 AM
Last Updated : 24 Dec 2018 09:36 AM

வேட்பு மனுவில் பொய் தகவலை கூறியிருந்தால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க தேர்தல் ஆணையம் திட்டம்

வேட்பு மனுவில் பொய்யான தகவலை தெரிவிக்கும் எம்பி, எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நிர்வாக அமைச்சகமாக மத்திய சட்ட அமைச்சகம் விளங்குகிறது. இதன்கீழ் இயங்கும் சட்டம் இயற்றுதல் துறை தேர்தல் ஆணையம் தொடர்பான பிரச்சினைகளை கவனித்து வருகி றது. இந்நிலையில், தேர்தல் ஆணை யம் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் (ஜனவரி 8), சட்டம் இயற்றுதல் துறை செயலாளர் ஜி.நாராயண ராஜுவை தலைமை தேர்தல் ஆணையர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அப்போது தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு பரிந்துரை களை முன்வைக்க திட்டமிட்டுள் ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பரிந்துரைகள் பற்றிய விவரம் வருமாறு:

இப்போது உள்ள சட்டப்படி சட்ட அமைச்சக பரிந்துரை அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டுமானால், நாடாளு மன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் பரிந்துரையின் அடிப் படையில் தேர்தல் ஆணையர்களை நீக்க முடியும். எனவே, தலைமை தேர்தல் ஆணையருக்கு உள்ளது போல, 2 தேர்தல் ஆணையர்களுக் கும் அரசியல் சாசன பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட உள்ளது. கடந்த 2015-ல் சட்ட ஆணையத்தால் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையி லேயே இந்தக் கோரிக்கை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பொய்யான தகவல் இடம்பெற்றிருப்பது பின்னாளில் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு 6 மாத சிறை தண்டனை மட்டுமே விதிக்க இப்போது உள்ள சட்டம் வகை செய்கிறது.

ஆனால் இதை தேர்தல் குற்றமா கக் கருதி சம்பந்தப்பட்டவர் களை தகுதி நீக்கம் செய்யும் வகை யில் திருத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளது. அப் போதுதான், வேட்பாளர்கள் பொய் யான தகவலை தெரிவிக்க பயப் படுவார்கள் என தேர்தல் ஆணை யம் கருதுகிறது.

இதுதவிர, சட்டப்பேரவைக்கு தேர்தலில் வேட்பாளர்களுக்கு செலவு நிர்ணயிப்பது போல சட்ட மேலவை தேர்தலில் போட்டி யிடுபவர்களுக்கும் செலவு செய்ய உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விரும் புகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x