

கர்நாடக அமைச்சரவையில் நகர சபை நிர்வாகத் துறை மற்றும் பெலகாவி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்தவர் ரமேஷ் ஜார்கிஹோளி. காங்கிரஸை சேர்ந்த இவருக்கும் அதே கட்சியை சேர்ந்த எம்எல்ஏ லட்சுமி ஹெப்பால்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் மூத்த அமைச்சர் டி.கே.சிவக் குமார் தலையிட்டு, ஹெப்பால்கருக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இதனால் ரமேஷ் ஜார்கி ஹோளிக்கும் டி.கே.சிவக்கு மாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சரவை கூட்டத் தின்போது இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் காங்கிரஸில் குழப்பத்தை ஏற்படுத் தியது. இதையடுத்து முன்னாள் முதல்வர் சித்தராமையா தலையிட்டு, டி.கே.சிவக்குமாரை அமைதிபடுத்தினார். இருப்பினும் அதிருப்தி அடைந்த ரமேஷ் ஜார்கிஹோளி அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து 4 முறை புறக்கணித்தார்.
தனது துறை ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாமல் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் ரகசிய கூட்டங் களை நடத்தி வந்தார். கடந்த வாரம் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நடத்திய இரவு விருந்தில் பங்கேற்றார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் வெளியாகின.
இந்நிலையில் கடந்த சனிக் கிழமை அமைச்சரவை விரிவாக்கத் தின்போது ரமேஷ் ஜார்கிஹோளி யின் சகோதரர் சதீஷ் ஜார்கி ஹோளி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து ரமேஷ் ஜார்கிஹோளி அமைச்ச ரவையில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர் நேற்று தனது ஆதரவு எம்எம்ஏக்களுடனும், மும்பை கர்நாடக பகுதியில் உள்ள மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ரமேஷ் ஜார்கி ஹோளி பாஜகவில் இணைய முடிவெடுத்து இருப்பதாக தெரிவித் துள்ளார். மேலும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. சில எம்எல்ஏக்கள் பதவி விலகினாலோ அல்லது பாஜகவுக்கு ஆதரவு தெரிவித் தாலோ மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என்பதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.