Published : 26 Dec 2018 12:33 PM
Last Updated : 26 Dec 2018 12:33 PM

உ.பி.யில் மோடியை தவறாகப் பேசிய மாற்றுத்திறனாளியை தாக்கிய பாஜக தலைவர்

பிரதமர் மோடியை தவறாகப் பேசியதற்காக மாற்றுத்திறனாளி ஒருவரை  உத்தரப் பிரதேச பாஜக தலைவர் முகமது மியா தடியால் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் முகமது மியா அவரது அலுவலத்துக்கு வெளியே சாலையில் நின்று கொண்டிருந்தபோது,  மாற்றுத்திறனாளி ஒருவர் அகிலேஷ் யாதவுக்குதான் நாங்கள் ஓட்டளிக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த முகமத் மியா அவரை தடியால் வாயில் அடித்து மிரட்டி இருக்கிறார். இந்தக்  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முகமத் மியாவுக்கு கண்டனங்கள் எழ அவர் தன் செயலுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். 

இதுகுறித்து முகமது மியா கூறும்போது, ''அந்த நபர் மோடியையும்,  யோகி ஆதித்ய நாத்தையும் விமர்சித்தார்.  அவர் மது அருந்தி இருந்தார். நான் அவரை அந்த இடத்திலிருந்து அகற்றவே அவ்வாறு செய்தேன். அவரது வாயில் நான் குச்சியை வைக்கவில்லை'' என்றார்.

 

 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முகமத் மியா சம்பால் மாவட்டத்தில் வளர்ந்து வரும் முக்கிய பாஜக தலைவராக கருதப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x