

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுவைக் குறைக்க டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைய டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் காற்று மாசு தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை டெல்லி அரசு அலுவலர்களின் ஊதியம் மற்றும் காற்று மாசுவுக்கு காரணமானவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
அபராதத் தொகையை செலுத்த தவறினால் மாதந்தோறும் ரூ.10 கோடி மேல்அபராதத் தொகையை டெல்லி அரசு கட்ட நேரிடும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.