வருமானம் ரூ.1000 கோடி; செலவு ரூ.758 கோடி: தேர்தல் ஆணையத்திடம் பாஜக அறிக்கை தாக்கல்

வருமானம் ரூ.1000 கோடி; செலவு ரூ.758 கோடி:  தேர்தல் ஆணையத்திடம் பாஜக அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

கடந்த 2017-18 ஆம் நிதி ஆண்டில், பாஜகவின் வருமானம் ரூ.ஆயிரத்து 27 கோடியாகவும், ரூ.758 கோடி செலவு செய்ததாகவும் அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய வருமானம், செலவுக் கணக்கு ஆகியவற்றின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.  அந்தக் கணக்குகளை, ஜனநாயக சீர்திருத்துக்கான அமைப்பு (ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2017-18 ஆம் நிதிஆண்டில் பாஜக தங்களுக்கு ரூ. ஆயிரத்து 27.339 கோடி வருமானம் வந்துள்ளதாகக் கணக்கு அளித்துள்ளது. அதேசமயம், ரூ.758.47 கோடி செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டின் வருமானத்தோடு ஒப்பிடுகையில் பாஜகவுக்கு வருமானம் ரூ.7 கோடி குறைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான வருமானம் குறித்த அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு 2017-18 ஆம் ஆண்டில் ரூ.104.847 கோடி வருமானம் வந்துள்ளதாகவும், ரூ.83.482 கோடி செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 2017-18 ஆம் ஆண்டில் ரூ.51.694 கோடி வருமானம் வந்துள்ளாகவும், ரூ.14.87 கோடி செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ரூ.8.15 கோடி வருமானம் வந்ததாகவும், ரூ.8.84 கோடி செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய ரூ.69 லட்சம் கடந்த நிதியாண்டில் வருமானத்துக்கு அதிகமாக அவரின் கட்சி செலவிட்டுள்ளதால், கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி எவ்வளவு ஈட்டியது எனத் தெரியவில்லை.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2017-18 ஆம் ஆண்டில் ரூ.5.167 கோடி வருமானமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.1.55 கோடி வருமானமும் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ரூ.255.36 கோடி வருமானம் வந்துள்ளதாகத் தெரிவித்தது. ஆனால் இந்த 2017-18 ஆம் ஆண்டு கணக்கை இன்னும் அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in