Published : 16 Dec 2018 08:38 AM
Last Updated : 16 Dec 2018 08:38 AM

இஷா அம்பானி திருமண வரவேற்பில் உணவு பரிமாறிய நட்சத்திரங்கள்

இந்தியாவின் முதல் பணக் காரராக இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் அண்மையில் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற இஷா அம்பானி, ஆனந்த் பிரமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்தி ரங்கள் விருந்து பரிமாறி அசத்தினர். நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட் டவர்களுக்கு நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர், நடிகர் கள் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஷாருக் கான், அமீர் கான் உள்ளிட்டோர் உணவு வகைகளைப் பரிமாறினர்.

விருந்தினர்களுக்கு நடிகர், நடிகைகள், பிரபலங்கள் உணவு பரி மாறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரூ.445 கோடியில் சொகுசு பங்களா

இந்த நிலையில் தனது மகள் இஷா அம்பானி வசிப்பதற்காக ரூ.445 கோடி செலவில் சொகுசு பங்களாவைக் கட்டி வருகிறார் முகேஷ் அம்பானி.

தெற்கு மும்பையில் உள்ள வொர்லி பகுதியில் மிகவும் பிரமாண்டமாக இந்த சொகுசு பங்களா 50 ஆயிரம் சதுர அடியில் அமைந்து வருகிறது. அரபிக் கடலைப் பார்த்தவண்ணம் இந்த பங்களா அதிநவீனமாக அமைக்கப் படுகிறது.

இந்த பங்களாவுக்கு குலிடா என்று பெயரிடப்பட்டுள்ளது. நீச்சல் குளம், நவீன ஜிம், 3டி கண்ணாடி முகப்பு என அனைத்து நவீன வசதிகளும் இந்த பங்களாவில் அமைக்கப்படுகின்றன,

முகேஷ் அம்பானி தற்போது 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் அதிக விலையுள்ள 27 அடுக்கு மாடி வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டில் உள்ள வசதிகளைப் போன்று தனது மகளுக்கும் புதிய வீட்டில் அமையவேண்டும் என்ற நோக்கில் இந்த பங்களா கட்டப்படுகிறது.

இஷா அம்பானி-ஆனந்த் பிரமல் ஜோடிக்கு இதை திருமணப் பரிசாக முகேஷ் வழங்கவுள்ளார். பங்களா தயாரானதும் இருவரும் அந்த வீட்டில் குடிபோகவுள்ளனர். இந்த இடத்தை முகேஷ் 2012-ல் வாங்கியதாகத் தெரியவந்துள்ளது.

இந்த பங்களாவின் முகப்பு மிகவும் சக்திவாய்ந்த கண்ணாடி களால் அமைக்கப்படுகிறது. வலிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக இரும்புக் குழாய் களும் முன்பகுதியில் பொருத்தப் படுகின்றன.

லண்டனைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர் எக்கர்ஸ்லே ஓ காலகன் மேற்பார்வையில் சொகுசு பங்களா அமைக்கப்படுகிறது. 3 மாடிகளைக் கொண்டதாக இந்த பங்களா அமைகிறது.

இஷா அம்பானியின் சகோதரர் ஆகாஷ் அம்பானி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொழிலதிபர் ஸ்லோகா மேத்தாவைத் திருமணம் செய்யவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x