சிறுபான்மையினர் என்ற கருத்தாக்கத்தை அகற்றுங்கள்: மொகமது ஜாஹிதுல்

சிறுபான்மையினர் என்ற கருத்தாக்கத்தை அகற்றுங்கள்: மொகமது ஜாஹிதுல்
Updated on
1 min read

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சிறுபான்மையினர் என்ற கருத்தாக்கத்தை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த மொகமது ஜாஹிதுல் திவான் என்பவர் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியான விவரம் வருமாறு:

ஜவஹர்லால் நேரு பலகலைக் கழக மாணவர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மொகமது ஜாஹிதுல் இந்துத்துவாவின் ஆதரவாளர். இவர் இந்துத்துவா என்பது தவறாக விளக்கம் அளிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய அதே வேளையில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக தான் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

"சிறுபான்மையினர் என்ற கருத்தாக்கம் நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை நான் பலமாக நம்புகிறேன். இதுதான் மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே சிறுபான்மையினர் என்ற கருத்தாக்கத்தை அகற்றுங்கள். ஆனால் கல்வி மற்றும் பண்பாட்டு ரீதியாக பின் தங்கியவர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது அவசியம்.

அவர்களுக்குக் கல்வி அளித்து அவர்களை முன்னேற்றுவது அவசியம், ஆனால் சிறுபான்மையினர் என்ற இந்த பட்டயம் நல்லதாகப் படவில்லை” என்கிறார் இந்த 29 வயது மொகமது ஜாஹிதுல் திவான்.

இவர் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சங்க துணைத் தலைவர் பொறுப்பிற்கு தேர்தலில் போட்டியிடுகிறார். சர்வதேசத் தரம் வாய்ந்த இந்த பல்கலைக் கழகத்தில் இவர் இந்தி மொழியில் பிஎச்.டி படித்து வருகிறார்.

அகில பாரத வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர்கள் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து தற்போது 2வது முஸ்லிம் நபர் தேர்தலில் நிறுத்தப்படுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in