

மாவோயிஸ்டு அச்சுறுத்தலை அடுத்து பிஹார் மற்றும் ஜார்கண்டில் ஒரு வார காலத்திற்கு 26 ரயில்களின் சேவையை ரத்து செய்வதாக கிழக்கு, மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாவோயிஸ்டுகள் இயக்கம் தொடங்கப்பட்டதை செப்டம்பர் 21-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை கொண்டாட உள்ளனர்.
அந்த ஒரு வார காலத்தில், மாவோயிஸ்டுகள் ரயில்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக உளவுத் துறை தகவல் அளித்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, பிஹார் மற்றும் ஜார்கண்டில் ஒரு வார காலத்திற்கு 26 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு, மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.