அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயர் மாற்றம்: மத்திய அரசு திடீர் முடிவு

அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயர் மாற்றம்: மத்திய அரசு திடீர் முடிவு
Updated on
1 min read

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் உள்ள 3 சிறிய தீவுகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அந்தமான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய பெயரைத் தீவுகளுக்கு சூட்ட உள்ளார்.

இதன்படி, அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள ரோஸ் தீவு, நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஆகிவை பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளன. ரோஸ் தீவு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நீல் தீவு சாஹேத் தீப் தீவு என்றும், ஹேவ்லாக் தீவு சுவராஜ் தீவு என்றும் மாற்றப்பட உள்ளது.

2-ம் உலகப்போரின்போது அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றி அதன்பின் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து அந்தமான் விடுவிக்கப்பட்டதாக பிரகடனம்செய்து நேதாஜி சந்திரபோஷ் கடந்த 1943-ம்ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி போர்ட் பிளையரில் தேசியக் கொடி ஏற்றிவைத்தார். அதுமட்டுல்லாமல், அந்தமான் நிகோபர் தீவுகளை சாஹேத் மற்றும் சுவராஜ் தீவுகளாக பெயர் சூட்டப்பட வேண்டும் என்று நேதாஜி விரும்பியுள்ளார்.

இது தொடர்பாக நேதாஜியின் உறவினரும், மேற்கு வங்க பாஜக துணைத்தலைவருமான சந்திரகுமார் போஸ், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதில், நாடு 75-வது சுதந்திரனத்தை கொண்டாடும் இந்த வேளையில் அந்தமான் தீவுகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் போர்ட்பிளையர் செல்லும் பிரதமர் மோடி, கடந்த 1943-ம் ஆண்டு நேதாஜி கொடியேற்றிய அதே ஜிம்கானா மைதானத்தில் 150 மீட்டர் கம்பத்தில் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அப்போது நடைபெறும் நிகழ்ச்சியில் தீவுகளின் பெயர்மாற்றம் குறித்த அறிவிப்பையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in