‘‘உங்களுக்கு இன்னும் எவ்வளவு சுதந்திரம் வேண்டும்?’’ - நசிருதீன் ஷாவை கடுமையாக சாடிய அனுபம் கெர்

‘‘உங்களுக்கு இன்னும் எவ்வளவு சுதந்திரம் வேண்டும்?’’ - நசிருதீன் ஷாவை கடுமையாக சாடிய அனுபம் கெர்
Updated on
1 min read

பிரதமர் மோடி ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு குறித்தும், அச்ச உணர்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி இந்தி நடிகர் நசிருதீன்  ஷாவை சக நடிகர் அனுபம் கெர் கடுமையாக சாடியுள்ளார். இந்த நாட்டில் வாழ உங்களுக்கு இன்னும் எவ்வளவு சுதந்திரம் வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நம் நாட்டில் சிலர், போலீஸாரின் உயிர் பலியை விட பசுவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பதாக இந்தி நடிகர் நசிருதீன் ஷா விமர்சனம் செய்தார். யார் பெயரையும் குறிப்பிடாத அவர் தனது கருத்தை யுடியூப்பில் பதிவேற்றம் செய்தார். அதில் ‘‘எனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஒருநாள் அவர்களை பெருங்கூட்டம் சூழ்ந்து நீ இந்துவா? முஸ்லீமா? என கேள்வி எழுப்பினால் அவர்களிடம் பதில் கிடையாது.

இதுபோன்ற சூழல் மாற்றம் நிகழ்வது தெரியாதது தனக்கு மேலும் கவலை அளிப்பதாகவும் நசீரூத்தீன்ஷா கூறினார்.

நசிரூதீன்ஷாவின் இந்த கருத்து தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நசிரூதீன் ஷாவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜக இளைஞரணி மற்றும் சில இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தின. நசிருதீன் ஷாவின் உருவ பொம்மையை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஜெய்ப்பூரில் அவர் பங்கேற்க இருந்த இலக்கிய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் நசிருதீன் ஷாவின் கருத்துக்கு சக நடிகரும், பாஜக ஆதரவாளருமான அனுபம் கெர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘இந்த நாட்டில் எந்த அளவுக்கு உங்களுக்கு சுதந்திரம் இருந்தால் நீங்கள், ராணுவத்தையும், விமானப்படை தளபதியையும், காஷ்மீரில் கல்வீச்சை எதிர்கொண்டு நிற்கும் வீரர்களையும் உங்கள் மோசமான வாயால் திட்டுவீர்கள்.

இன்னும் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் வேண்டும்? அவர் என்ன  நினைக்கிறாரோ அல்லது என்ன பேசுகிறாரோ அவை அனைத்தும் உண்மையல்ல’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in