காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் பொது மக்கள் 7 பேர் பலி

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் பொது மக்கள் 7 பேர் பலி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறிது ஏ என் ஐ வெளியிட்ட செய்தியில்

”புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிமூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு இன்று (சனிக்கிழமை) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிமூ கிராமத்தில்  பாதுகாப்புபடையினர்  தேடுதக் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வீடாகப் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் 3 தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில்  சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள்  7 பேர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியானவர்களில் எம்பிஏ பட்டதாரி அபித் ஹுசனும் ஒருவர். ஒரு மாததுக்கு முன்னர் இந்தோனேசியாவிலிருந்து தனது மனைவி மற்றும் ஒருமாத குழந்தையுடன் காஷ்மீர் வந்திருக்கிறார்.

பாதுகாப்புப் படையின் இந்தத் தாக்குதலுக்கு மெகபூபா முஃப்தி மற்றும் ஃபருக் அப்துல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து பிடிபி கட்சியின் அரசியல் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், உயிரிழந்த அந்த அப்பாவி மக்களின் உயிரை எந்த விசாரணையாலும் திரும்பி கொண்டுவர முடியாது. தென் காஷ்மீர் அரசாங்காத்தால் கடந்த ஆறு மாதமாக அச்சத்தில் உள்ளது. அரசு வன்முறையை தடுக்க தவறிவிட்டது. உயிரிழந்த உயிர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in