குஜராத் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி

குஜராத் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி
Updated on
1 min read

குஜராத் மாநிலம் ஜஸ்டன் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக விளங்கியவர் கன்வர்ஜி பவாலியா. ஜஸ்டன் தொகுதியில் ஐந்து முறை நின்று வெற்றி பெற்றவர். ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை எம்பி-யாகவும் இருந்துள்ளார்.

சமீபத்தில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜஸ்டன் தொகுதிக்கு கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

பாஜக சார்பில் கன்வர்ஜி பவாலியாவும், காங்கிரஸ் சார்பில் அவ்சார் நஹியா போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தொடக்கம் முதலே இந்த தொகுதியில் பாஜக முன்னிலை பெற்று வந்தது. மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா 19 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in