மீடூ இயக்கத்தால் 80% ஆண்களிடம் மாற்றம்

மீடூ இயக்கத்தால் 80% ஆண்களிடம் மாற்றம்
Updated on
1 min read

மீடு நானும் கூட இயக்கத்தின் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெளியிட்டனர். இதன் காரணமாக மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், பதவியை இழந்தார். மேலும் சில பிரபலங்கள் கடும் அவமானத்தைச் சந்தித்தனர்.

இந்நிலையில் மீடூ இயக்கம் குறித்து தனியார் ஆய்வு நிறுவனம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில் அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் 10 ஆண்களில் 8 பேர் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகுவதாகத் தெரிவித்தனர்.

பணிவாய்ப்பு, குடும்ப கவுரவம், சமுதாய அந்தஸ்தை இழக்க நேரிடும் என்பதால் நடத்தையில் கண்ணியம் காப்பதாக பெரும்பாலான ஆண் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதன்படி மீடூ இயக்கத்தால் சுமார் 80 சதவீத ஆண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in